இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

124 நிம்மதி வந்தால் காய்ச்சல் வரும்

ஒரு மனிதனுக்கு காய்ச்சல் வருவதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன என்று நாம் அறிந்ததே. அவை.

1. உடலுக்குள் கிருமிகள் வந்தால் அதை அளிப்பதற்கு காய்ச்சல் வரும்.
2. உடலில் உள்ள கழிவுகள் அதிகரிக்கும் பொழுது அதை குணப்படுத்துவதற்கு காய்ச்சல் வரும்.
3. உடலில் நோய்கள் வரும்பொழுது அதைக் குணப்படுத்துவதற்கு காய்ச்சல் வரும்.

மேற்கொண்ட மூன்று காரணங்களுக்காக மட்டும் இல்லாமல் புதியதாக இன்னொரு காரணத்தையும் இந்த பட்டியலில் சேர்த்து இருக்கிறோம். அந்த நான்காவது காரணம் நிம்மதி வந்தால் காய்ச்சல் வரும்.

பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். நிம்மதி வந்தால் எப்படி காய்ச்சல் வரும் ? இந்தக் கேள்வி மனதில் உருவாவதை உங்களால் தவிர்க்க முடியாது. அது எப்படி என்பதற்கு விடை அறிவோம்.

எப்பொழுது நாம் ஒரு விசயத்திற்காக அல்லது இலட்சியத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிரோமோ அப்பொழுது காய்ச்சல் வராது. உதாரணமாக உங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய முயற்சியில் இருக்கும் பொழுது அல்லது கடன் பிரச்சனையை தீர்ப்பதற்காக உளைத்துக்கொண்டிருக்கும்போளுது அல்லது காதலன் தன் காதலியுடன் ஐ லவ் யூ என்று தன் காதலை வெளிப்படுத்துவதற்காக அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அல்லது எதிரியை பழிவாங்கவேண்டும் என்று துரத்திக்கொண்டிருக்கும் பொழுது காய்ச்சல் வராது அதாவது ஒவ்வொருவர் மனதிலும் இது நடந்தால் நிம்மதி அது நடந்தால் நிம்மதி என்று பலவிசயங்களை பதிவு செய்து வைத்திருக்கிறோம். அந்த விஷயங்கள் எப்பொழுது நடக்கிறதோ அப்பொழுது முதல் அடுத்த வினாடியில் இருந்து நமது உடல் நோய்களை குணப்படுத்த ஆரம்பிக்கிறது. கழிவுகளை உடலை விட்டு வெளியேற்ற ஆரம்பிக்கிறது. கிருமிகளை கொலை செய்ய ஆரம்பித்துவிடும். அதுவரை அதாவது காய்ச்சல் வருவதற்கு முன்பு வரி நமது இலட்சியம், ஆசை நிறைவேருவதர்க்காக உடலில் உள்ள உறுப்புகளும், உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் தேவையான சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கும் எனவே தான் கழிவுகளை நீக்கி உடலை ஆரோக்கியபடுத்துவதர்க்கான செயலை செய்வதில்லை. நிம்மதி வந்தவுடன் காய்ச்சல் வருகிறது.

சில உதாரணங்களை பார்ப்போம் அதிலிருந்து நாம் நிம்மதி வந்தால் காய்ச்சல் வருவதைப் புரிந்துக் கொள்வோம்.

1. பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் நடந்தால் தான் நான் நிம்மதியாக வாழ்வேன் என்று மனதில் எண்ணப் பதிவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வாறே திருமணம் முடிந்தவுடன் அவர்களின் உடல் நோய்களை நீக்கும் வேலையை ஆரம்பிக்கும் பொழுது அவர்களுக்கு காய்ச்சல் வருகிறது. எனவே அதைப்பார்த்து நாம் பயப்பட வேண்டாம். தைரியமாக நிம்மதியாக இருக்கலாம்.

2. காதலனோ, காதலியோ தங்கள் காதலை மனதுக்குள் வைத்துக் கொண்டு ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து கொண்டிருப்பார். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களை பின் தொடர்வது அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பது என்று இருக்கும் பொழுது அவர்கள் உடலின் மொத்த சக்தியும் தங்களின் காதலை வெளிப்படுத்தி காதலனுடனோ, காதலியுடனோ சம்மதம் பெறுவதற்கான முயற்சிக்கே செலவழிந்து கொண்டிருக்கும், உடலை பராமரிக்கவும், நோய்களை எதிர்த்துப்போரிடவும் சக்தி இருக்காது. காதலன் அல்லது காதலி தங்களது சம்மதத்தை ஐ லவ் யூ என்று என்றைக்கு வெளிப்படுத்துகிறதோ அதை கேட்ட நொடியில் இருந்து காய்ச்சல் தொடங்குகிறது. அதுவரை வாழ்வின் இலட்சியத்திற்கு தேடலுக்கு என்று உடலின் சக்தி முழுவதும் செலவழிக்கப்பட்டது. அது நிறைவேறி உடல் தன்னை ஆரோக்கிய படுத்திக் கொள்ள காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் என்பது நல்லது என்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

3. காணாமல் போன குழந்தை கிடைத்தவுடன் அந்தப் பெற்றோருக்கு நிம்மதிப் பெருமூச்சு வரும். மனம் மகிழ்ச்சி அடைந்து நிம்மதியான பெருமூச்சை சுவாசிக்கும் போலுற்ற்ஹு அநதப் பெற்றோருக்கு காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது.
4. பெரும் கடன் சுமையில் சிக்கி தத்தளிப்பார்கள் மனதில் சஞ்சலம் ஏற்ப்படும். அந்த நிலையில் உள்ளவர்கள் ஊரைவிட்டு எங்காவது சென்று விடலாமா? தற்கொலை செய்து கொள்ளலாமா/ என்று பலவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும் பொழுது திடீரென்று ஏதாவது ஒன்றில் அவர்கள் கடன் முழுவதும் அடைக்கப்ப்படுமானால் அதனால் ஏற்ப்படும் நிம்மதியில் அவர்களுக்கு காய்ச்சல் வர வாய்ப்புண்டு.

5. நமது எதிரி தோற்றுவிட்டாலோ, இறந்துவிட்டாலோ, கொல்லப்பட்டுவிட்டாலோ நம் எதிரியை ஜெயிதுவிட்டாலோ அல்லது எதிரிக்கு ஏதாவது துன்பம் வரும் பொழுது அப்பாடா எதிரி அழிந்து விட்டான் என்று நம்முடைய ஆழ்மனதில் ஏற்ப்பட்டிருக்கும் பழிவாங்கும் பதிவு அழிந்தவுடன் மனம் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகிறது. இந்த சந்தர்ப்பத்தில் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

6. நீண்டநாள் சந்தேகங்கள் தெளிவடியும் பொழுது காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. பல காலமாக மனதை அரித்துக் கொண்டிருந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். பல வருடங்களாக புரியாத புதிராக இப்ருந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பொது காய்ச்சல் வரும்.

7. நமது வாழ்க்கை இலட்சியம் நிறைவேறும் பொழுது காய்ச்சல் வரும், உதாரணமாக நமது சொந்த ஊரில் சொந்த வீடு கட்டினால் நிம்மதி அல்லது வெளிநாட்டில் வேலை கிடைத்தால் நிம்மதி வெளிநாட்டிலிருந்து நம் தாய் நாட்டிருக்கு திரும்பினால் நிம்மதி என்று வாழ்கையின் இலட்சியம் வைத்திருப்பவர்களுக்கு அது எபொழுது நிறைவேறுகிறதோ அப்பொழுது அவர்களுக்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

8. மாணவர்களுக்கு தாங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்று அறியும் பொழுதோ அல்லதி பள்ளியிலோ, கல்லூரியிலோ மாநிலத்திலோ முதல் மாணவனாக வரும் பொழுதோ அந்த சந்தோசத்தில் நிம்மதி காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

9. நீதிமன்றத்தில் உங்கள் வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும்பொழுது பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்த மன உளைச்சல் நீங்குகிறது. மன நிம்மதி அடைந்து மனிதன் சக்தி, உடலின் சக்தியை இரண்டும் உடலில் உள்ள நோயை குணப்படுத்துவதர்க்காகவும், கிருமிகளைக் கொள்வதற்காகவும் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

10. மனதுக்குப் பிடிதவாப்று நல்ல வேலை கிடைக்கும் பொழுது பிடிக்காத வேளையில் இருந்து வெளியேறும் பொழுது நல்ல கணிசமான சம்பளம் கிடைக்கும்பொழுது எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும்பொழுது என்ற இப்படி வேலை சம்பதப்பட்டவை நம்மனதில் பிடித்தவாறு நடக்கும் பொழுது காய்ச்சல் வருவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே அளவுக்கு அதிகமான நிம்மதியும், சந்தேகமும் கூட காய்ச்சலை உண்டுபண்ணும் என்பதைப் புரிந்துகொண்டால் திடீரென்று வரும் காய்ச்சலுக்கு நாம் பயப்படவேண்டியதில்லை. அப்பொழுது தெளிவாக இருக்கலாம். மனதுக்குப் பிடித்தவாறு மனைவி அமைந்தால் கூட காய்ச்சல் வரும். எனவே தயவு செய்து காய்ச்சல் என்றால் என்ன அது வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை என்ற புத்தகத்தை முழுவதுமாக படித்து புரிந்தது கொண்டு அதில் கூறியுள்ள முறைப்படி மருந்து மாத்திரையின்றி நம்முடைய நோயை நாம் குணப்படுத்தி கொண்டால் நாம் ஆரோக்கியம்மாக வாழலாம். எனவே திடீரென்று வரும் காய்ச்சலுக்கு நிம்மதி கூட காரணமாக இருக்கலாம் என்பதைப் புரிந்து கொண்டு இனிமேல் பயப்படுவதையும், கவலைப்படுவதையும் தவிர்ப்போம்.
நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடலில் தன்னைத்தானே குணப்படுத்தி கொள்கிறது. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ உடல் தன்னைத்தானே வருத்திக்கொல்கிறது. மனதுக்கும் உடலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே இனிமேல் நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பணம் செலவழிப்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிம்மதிதான் முக்கியமானது பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திர்க்காக என்று பல காரணங்களுக்காக நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா?

நிம்மதியாக வாழ்வது இப்படி என்பதை நம்முடைய மனதின் மணம் புத்தகத்தை படித்துப் புரிந்துகொள்ளுங்கள். எனவே நிம்மதி வந்தால் காய்ச்சல் வரும் என்பதைப் புரிந்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து காய்ச்சல் வந்து உடலை ஆரோகியப்படுத்தி ஆனந்த வாழ்வு பெறுவோம்.

நிம்மதியாக வாழ்வோம் ! ஆரோக்கியமாக வாழ்வோம் !

மேலும் விவரங்களுக்கு : +91 8883805456

123 சிறுநீர் கழித்தவுடன் நீர் குடிக்க வேண்டும்


எப்பொழுதெல்லாம் நாம் சிறுநீர் கழிக்கிறோமோ உடனே நமக்கு தண்ணீர் தேவைபடுகிறது என்று பொருள். எனவே சிறுநீர் களித்தவுடனேயே குறைந்த அளவாவது நீரை சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே வாய்பிருந்தால், முடிந்தால் சிறுநீர் கழித்தவுடன் தண்ணீர் சிறிதளவு சாப்பிடுவோம். 

122 தண்ணீரை குடிக்கக்கூடாது

தண்ணீரை குடிக்கக்கூடாது, சப்பி சப்பி சாப்பிட வேண்டும்.

தண்ணீரை சாப்பிட வேண்டும். உணவை குடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உள்ளது. உணவை வாயில் வைத்து நன்றாக மென்று கூழ் போல’ செய்து நிராகாரமாக மாற்றி குடிக்க வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரை மெதுவாக உணவு சாப்பிடுவதைப் போல சப்பி சப்பி சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரில் ஆறு சுவைகள் உள்ளது தண்ணீரை மெதுவாக சப்பி சப்பி குடிப்பது மூலமாக நம் உடலுக்கு தேவையான ஆறு சுவைக்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் தண்ணீரில் உமிழ் நீர் கலந்து வாயில் உள்ள நொதிகள் கலந்து உள்ளே செல்வதால் நம் உடலுக்கு பல விதமான நம்மைகள் ஏற்படுகிறது. மேலும் தண்ணீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் மற்றும் தண்ணீரை நமது உடல் வெப்ப நிலைக்கு மாற்றுவதற்கும் டான்சில் எனப்படும் உறுப்பு உதவி செய்கிறது. வேகமாக அன்னாந்து கடகடவென தண்ணீர் குடிப்பவர்களுக்கு இந்த தண்ணீர் டான்சில் எனப்படும் உறுப்பில் நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் தண்ணீர் வேகமாக டான்சில் வழியாக கடக்கும்போது டான்சில் வேகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறது. எனவே அதில் நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. தண்ணீரை எவ்வளவு மெதுவாக குடிக்கிறோமோ அவ்வளவு தூரம் நம் உடலுக்கு ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கும். டான்சில், வீசிங், நெஞ்சு சளி போன்ற நுரையீரல் சம்மந்தப்பட்ட மூக்கு சம்மந்தப்பட்ட சைனஸ் போன்ற எந்த வியாதிகயும் நமக்கு வராது. வந்தால் அது உடனே குணமாகிவிடும். எனவே தண்ணீரை மெதுவாக சப்பி சப்பி சுவையை ரசித்து குடிக்கலாம்.